புகையிலை விற்ற மூதாட்டி கைது-மற்றொரு கடைக்கு சீல்வைப்பு


புகையிலை விற்ற மூதாட்டி கைது-மற்றொரு கடைக்கு சீல்வைப்பு
x

புகையிலை விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார். புகையிலை விற்ற மற்றொரு கடைக்கு சீல்வைக்கப்பட்டது.

சேலம்

கன்னங்குறிச்சி:

சேலம் ஜட்ஜ்ரோடு ராமசாமி நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் தங்கம்மாள் (வயது 65). இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின் பேரில் கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் மூதாட்டியின் கடையில் திடீரென சோதனை நடத்தினர். அங்கு புகையிலை பொருட்கள் பதுக்கி விற்றதை போலீசார் கண்டுபிடித்து தங்கம்மாளை கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

கோரிமேட்டை அடுத்த அன்பு நகரில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த புஷ்புநாதன் என்பவரது கடையை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பூட்டி சீல் வைத்தார்.


Next Story