தோட்டத்தில் கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது


தோட்டத்தில் கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது
x
சேலம்

பெத்தநாயக்கன்பாளையம்:

சேலம் மாவட்டம் கருமந்துறை மலைப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தேக்கம்பட்டு பகுதியை சேர்ந்த விவசாயி தீர்த்தகிரி (வயது 65) தனது தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு நடுவே கஞ்சாவை ஊடுபயிராக பயிரிட்டு இருப்பதாக கருமந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தோட்டத்தில் ஊடுபயிராக கஞ்சா பயிரிட்டு வளர்த்து வந்த தீர்த்தகிரியை கைது செய்தனர்.


Next Story