பர்கூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் அண்ணன் கைது


பர்கூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் அண்ணன் கைது
x

பர்கூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

பர்கூர்:

பாலியல் தொந்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் முதல் மனைவி இறந்து விட்டார். அவர்களுக்கு 21 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அந்த தொழிலாளி 2-வது திருமணம் செய்து கொண்டார். 2-வது மனைவிக்கு 5 வயதில் மகள் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி சிறுமி வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தாள். அந்த நேரம் அங்கு வந்த தொழிலாளியின் முதல் மனைவியின் 21 வயது மகன், தனது தங்கை உறவு முறை கொண்ட அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

கைது

இதை அறிந்த சிறுமியின் தாயார் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அந்த வாலிபரை கைது செய்தார்.

தங்கை உறவு முறையிலான சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story