உத்தனப்பள்ளியில், சிப்காட்டிற்கு நிலம் எடுக்க எதிர்ப்பு: காத்திருப்பு போராட்டம் நடத்திய 65 பேர் கைது


உத்தனப்பள்ளியில், சிப்காட்டிற்கு நிலம் எடுக்க எதிர்ப்பு: காத்திருப்பு போராட்டம் நடத்திய 65 பேர் கைது
x

உத்தனப்பள்ளியில் சிப்காட்டிற்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம் நடத்திய 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

சிப்காட்டிற்கு நிலம் எடுக்க எதிர்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகாவிற்கு உட்பட்ட உத்தனப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள அயர்னப்பள்ளி மற்றும் நாகமங்கலம் ஆகிய 3 ஊராட்சிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 34 ஏக்கர் நிலத்தை 5-வது சிப்காட் அமைக்க அரசு கையகப்படுத்தி வருகிறது.

விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் நிலம் எடுப்பில் பாதிக்கப்படும் விவசாயிகள் ஒன்றிணைந்து உத்தனப்பள்ளியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு கடந்த26-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

65 பேர் கைது

அதிகாரிகள் நிலம் கையகப்படுத்துவதை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் தைப்பொங்கலை கருப்பு பொங்கலாக கருதுவதாக கூறி, அவர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 65 பேரை நேற்று உத்தனப்பள்ளி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அனைவரும் மாலையில் விடுதலைசெய்யப்பட்டனர்.


Next Story