பாப்பாரப்பட்டி அருகே ஆடு திருடிய 2 பேர் சிக்கினர்
பாப்பாரப்பட்டி அருகே ஆடு திருடிய 2 பேர் சிக்கினர்.
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே உள்ள வள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 36), விவசாயி. இவர் தனது வீட்டு முன்பு உள்ள கொட்டகையில் 2 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று அதிகாலை இவரது வீட்டு முன்பு ஆடு கத்தும் சத்தம் கேட்டு பெருமாள் கண் விழித்து எழுந்து பார்த்துள்ளார். அப்போது பெருமாளின் 2 ஆடுகளை மோட்டார் சைக்கிளில் தூக்கி ைவத்து மர்ம நபர்கள் 2 பேர் தப்பிச்செல்ல முயற்சித்தனர். இதைத்தொடர்ந்து பெருமாள் திருடன், திருடன் என கூச்சல் போட்டார். இதைக்கேட்ட அக்கம் பக்கத்தினர் ஆடுகளை திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயற்சித்த மர்ம நபர்களை மடக்கி பிடித்து ஆடுகளை அவர்களிடம் இருந்து மீட்டனர். பின்னர் அவர்களை பாப்பாரப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரித்ததில் ஆடு திருடியவர்கள் இருவரும் அ.பாப்பாரப்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (20), மற்றும் மற்றொரு சீனிவாசன் (19) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.