செல்போனில் அதிக சத்தத்துடன் படம் பார்த்ததை தட்டிக்கேட்ட ஓட்டல் ஊழியரை மதுபாட்டிலை உடைத்து குத்திய வாலிபர் கைது


செல்போனில் அதிக சத்தத்துடன் படம் பார்த்ததை தட்டிக்கேட்ட ஓட்டல் ஊழியரை மதுபாட்டிலை உடைத்து குத்திய வாலிபர் கைது
x

செல்போனில் அதிக சத்தத்துடன் படம் பார்த்ததை தட்டிக்கேட்ட ஓட்டல் ஊழியரை மதுபாட்டிலை உடைத்து குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

கன்னங்குறிச்சி:

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியை சேர்ந்தவர் ஆதிரத்தனேஸ்வரன் (வயது 19). இவர் சேலம் சின்ன முனியப்பன் கோவில் அருகே உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வந்தார். அவர் அதேபகுதியில் உள்ள காமராஜ் நகரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தார். சம்பவத்தன்று இவரது அறைக்கு ஓட்டல் காசாளரான ராமநாதபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (34) என்பவர் வந்தார். இரவு அவர் அதே அறையில் தூங்கி உள்ளார்.

அப்போது மது அருந்தி இருந்த ஆதிரத்தனேஸ்வரன், தனது செல்போனில் அதிக சத்தத்துடன் படம் பார்த்துள்ளார். இதில் தூக்கம் கலைந்த ராமச்சந்திரன், செல்போனில் சத்தத்தை குறைத்து வைத்து படம் பார்க்க வேண்டியது தானே என்று கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆதிரத்தனேஸ்வரன் அங்கிருந்த மதுபாட்டிலை எடுத்து உடைத்து ராமச்சந்திரனின் முதுகில் குத்திவிட்டார். இதில் காயம் அடைந்த அவர் உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். சம்பவம் குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதிரத்தனேஸ்வரனை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதும், குண்டர் தடுப்பு சட்டத்தில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் தான் அவர் விடுதலையானதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story