சிறுமியை கடத்த முயன்றவர் கைது


சிறுமியை கடத்த முயன்றவர் கைது
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

தொண்டி,

தொண்டியை சேர்ந்த 7 வயது சிறுமி வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த கீழக்கரையை சேர்ந்த முனியசாமி (வயது 24) என்பவர் திடீரென சிறுமியின் வாயை பொத்தி கடத்தி செல்ல முயன்றார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சத்தம்போடவே அவர் சிறுமியை இறக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து முனியசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story