கடத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் அலுமினிய கம்பிகளை திருடிய 7 பேர் சிக்கினர்


கடத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் அலுமினிய கம்பிகளை திருடிய 7 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மொரப்பூர்:

கடத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் தளவாட பொருட்களை சேமித்து வைக்கும் குடோன் உள்ளது. சம்பவத்தன்று இந்த குடோன் அருகே ரூ.2 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான அலுமினிய கம்பிகளை மின்வாரிய ஊழியர்கள் வைத்து விட்டு சென்றனர். அதனை இரவில் மர்மநபர்கள் திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது மின்வாரிய அலுவலகத்தில் திருடியது காரிமங்கலம் அருகே உள்ள சென்னன்கொட்டாயை சேர்ந்த பசுபதி (வயது 25), புளியம்பட்டியை சேர்ந்த பிரபு (25), கள்ளியூரை சேர்ந்த மூர்த்தி (28), வீரகவுண்டனூரை சேர்ந்த சந்தோஷ் (27), வி.பள்ளிப்பட்டியை சேர்ந்த ஸ்ரீதர் (22), எம்.கே.புதூரை சேர்ந்த மோகன் (22), வையம்பட்டியை சேர்ந்த சபரி (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.


Next Story