ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது


ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
x

ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று பொன்னம்மாபேட்டை ரெயில்வே கேட் அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு ஆட்டோவை தடுத்து சோதனை நடத்தினர். அதில் 12 மூட்டைகளில் 250 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தி வந்த அழகாபுரத்தை சேர்ந்த அழகேசன் (வயது 52), பொன்னம்மாபேட்டையை சேர்ந்த கோபால் (37), சிதம்பரம் (59) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.


Next Story