உத்தனப்பள்ளி அருகேகார் கண்ணாடியை உடைத்த பஸ் டிரைவர், கண்டக்டர் கைது
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை:
கோவையை சேர்ந்தவர் சுஷ்மிதா (வயது 22). இவர் கோவையில் இருந்து காரில் ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ராயக்கோட்டை- ஓசூர் சாலையில் தொட்டமெட்டரை அருகே வந்தபோது பின்னால் வந்த தனியார் பஸ் தொடர்ந்து `ஹாரன்' அடித்து வழிவிட சொன்னதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் சுஷ்மிதா காரை வழிமறித்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் அவரிடம் தகராறு செய்து கார் கண்ணாடியை கல்லால் உடைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுஷ்மிதா உத்தனப்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் தனியார் பஸ் டிரைவரான தங்கதுரை (வயது 36), கிளீனர் அனில்குமார் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story