ஏரியூர் அருகே சிப்ஸ் கடைக்காரரை தாக்கிய 3 பேர் கைது
தர்மபுரி
ஏரியூர்:
ஏரியூர் அருகே உள்ள பெரும்பாலையை அடுத்த போடம்பட்டியை சேர்ந்தவர் முருகன் மகன் கந்தசாமி (வயது 29). இவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். மேலும் பணம் கொடுக்கல், வாங்கல் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த 3-ந் தேதி கந்தசாமி, தனது நண்பர் சின்னதம்பியுடன் ஸ்கூட்டரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சாணாரப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே அந்த பகுதியை சேர்ந்த அஜித் (24), சின்னண்ணன் (22), மணிகண்டன் (31) ஆகியோர் ஸ்கூட்டரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கந்தசாமி, சின்னதம்பியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரும்பாலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜித், சின்னண்ணன், மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Next Story