பாலக்கோடு அருகே கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்


பாலக்கோடு அருகே கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே உள்ள அந்தேரிகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்துவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாலக்கோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தேரிகாடு கோவில் அருகே 2 பேர் சாக்கு மூட்டையுடன் நின்றனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சேட்டு (வயது 43), சுந்தரம் (30) என்பதும், 1¼ கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 1¼ கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


Next Story