மின்சாதன பொருட்கள் திருடிய 2 பேர் கைது
மின்சாதன பொருட்கள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை
சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் காசியா பிள்ளைநகர் பகுதியில் கார்த்தி என்பவர் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வீட்டில் தச்சு வேலை செய்வதற்காக பொன்னமராவதி பகுதியை சேர்ந்த சசிகுமார் வேலை செய்து வருகிறார். கடந்த 16-ந்தேதி தன்னுடைய மின்சாதன பொருட்களை வேலை செய்யும் வீட்டில் வைத்து விட்டு ஊருக்கு சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்த போது அது திருடப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சிங்கம்புணரியை சேர்ந்த சூர்யா(22), அவருடைய நண்பர் ஸ்டாலின்(30) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story