ரூ.17 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 7 பேர் கைது

ரூ.17 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 7 பேர் கைது
x

திருப்பூரில் வாலிபரிடம் ரூ.17 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீஸ் தேடுகின்றனர்.

திருப்பூர்

திருப்பூரில் வாலிபரிடம் ரூ.17 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீஸ் தேடுகின்றனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரூ.17 லட்சம் வழிப்பறி

திருப்பூர் பெரிய கடைவீதி பகுதியை சேர்ந்தவர் ஷபுதீன் (வயது 44). இவர் காங்கயம் ரோடு ராக்கியாபாளையம் பகுதியில் பனியன் வேஸ்ட் வியாபார தொழில் செய்து வருகிறார். கடந்த 17-ந்தேதி மதியம் ஷபுதீன் அவரிடம் வேலை செய்யும் சாகுல் ஹமீது (32) என்பவரை வியாபாரம் சம்பந்தமாக அவினாசி ரோடு முருங்கப்பாளையத்திற்கு சென்று சரவணக்குமார் என்பவரிடம் இருந்து ரூ.17 லட்சத்தை வாங்கி வருமாறு அனுப்பி வைத்தார்.

இதையடுத்து முருங்கப்பாளையம் சென்ற சாகுல் ஹமீது அங்குள்ள பனியன் நிறுவனத்தில் இருந்த சண்முகராஜ் என்பவரிடம் இருந்து ரூ.17 லட்சத்தை வாங்கி ஒரு பையில் வைத்துக்கொண்டு, மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டார். ஆனால் 200 மீட்டர் செல்வதற்குள் மோட்டார்சைக்கிளில் முகக்கவசம் அணிந்த 3 மர்ம ஆசாமிகள் சாகுல் ஹமீது மோட்டார்சைக்கிளை வழிமறித்து ரூ.17 லட்சத்தை பறித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

திருப்பூரில் வாலிபரிடம் ரூ.17 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீஸ் தேடுகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த கொங்குநகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் மற்றும் 15 வேலம்பாளையம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்தகண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டனர்.

இந்த நிலையில் இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக மோகன்குமார், கார்த்திக், அசோக், சதீஸ், ஜெகதீஷ், பிரகாஷ், சசிகுமார் ஆகிய 7 பேரை 15 வேலம்பாளையம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சிலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story