லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது


லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
x

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சங்ககிரி:

சங்ககிரி மத்தாளி காலனி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக சங்ககிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சங்ககிரி போலீசார் அந்த பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது பவானி கோட்டைமேடு பகுதியை சேர்ந்த பிரபு சரவணன் (வயது 34), எடப்பாடி வீரப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (36), சங்ககிரி மொத்தையனூர் பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா (25) ஆகியோர் வெளி மாநில லாட்டரி சீட்டு எண்களை வெள்ளை துண்டு பேப்பரில் எழுதி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.5,850-ஐ பறிமுதல் செய்தனர்.



Next Story