கார் சர்வீஸ் நிறுவனத்தில் திருடியவர் கைது


கார் சர்வீஸ் நிறுவனத்தில் திருடியவர் கைது
x

கார் சர்வீஸ் நிறுவனத்தில் திருடியவர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சூரமங்கலம்:

சேலம் மாமாங்கத்தில் கார் சர்வீஸ் நிறுவனம் உள்ளது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.45 ஆயிரம் மதிப்பிலான கார் உதிரி பாகங்கள் திருடப்பட்டன. இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் சுரேஷ்குமார் சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் கார் சர்வீஸ் நிறுவனத்தில் திருடியது கன்னங்குறிச்சியை சேர்ந்த தனசேகரன் (வயது 27) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story