பெண்ணுக்கு பாலியல் தொல்லை-2 பேர் கைது


பெண்ணுக்கு பாலியல் தொல்லை-2 பேர் கைது
x

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

இளம்பிள்ளை:

இளம்பிள்ளை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் வீட்டில் தனது குழந்தையுடன் இருந்தார். அப்போது தப்பகுட்டை சின்ன மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த டேவிட் என்பவர் அவருடைய வீட்டுக்குள் நுழைந்தார். மேலும் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் டேவிட், தனது நண்பரான சிவாவுடன் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பெரில் இளம்பிள்ளை போலீசார் டேவிட், சிவா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story