சீலநாயக்கன்பட்டியில் லாரி டிரைவரிடம் வழிப்பறி; வாலிபர் கைது
சீலநாயக்கன்பட்டியில் லாரி டிரைவரிடம் வழிப்பறி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அன்னதானப்பட்டி:
சேலம் களரம்பட்டி ஆஸ்பத்திரியார் காடு பகுதியை சேர்ந்தவர் பச்சியப்பன் (வயது 42), லாரி டிரைவர். இவர் நேற்று எருமாபாளையத்தில் இருந்து சீலநாயக்கன்பட்டிக்கு லாரியில் வந்து கொண்டிருந்தார். இரட்டைக்கோவில் அருகே அவர் வந்த போது, அங்கு வந்த சில நபர்கள் பச்சியப்பனை திடீரென வழிமறித்து, கத்தியைக்காட்டி மிரட்டி தாக்கினர். பின்னர் அவர்கள் அவரிடமிருந்து ரூ.1,100-யை பறித்துக்கொண்டு, பிடிக்க வந்த அருகில் இருந்த நபர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்டது மூணாங்கரடு கிராம நிர்வாக அலுவலகம் பகுதியைச் சேர்ந்த கோபி (22) என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து பணம், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.