மேச்சேரி அருகே முன்னாள் ஊராட்சி தலைவியின் வீடு புகுந்து திருடியவர் கைது
மேச்சேரி அருகே முன்னாள் ஊராட்சி தலைவியின் வீடு புகுந்து திருடியவர் கைது செய்யப்பட்டார்.
சேலம்
மேச்சேரி:
மேச்சேரி அருகே குட்டப்பட்டி புதூர் 4 ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி (வயது 75). இவர், எம்.காளிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி ஆவார். கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து ருக்மணி கழுத்தில் கத்தியை காட்டி மிரட்டியதுடன் 7 பவுன் நகையை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே தும்பாதுளிப்பட்டி பெருமாம்பட்டி பகுதியை சேர்ந்த சரத்குமார் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 பவுன் நகையை மீட்டனர்.
Next Story