நண்பரை கத்தியால் குத்தியவர் கைது


நண்பரை கத்தியால் குத்தியவர் கைது
x

நண்பரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

கொண்டலாம்பட்டி:

சேலம் கொண்டலாம்பட்டி அருகே பெரிய புத்தூர் பகுதி மலங்காடை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 26). கூலி தொழிலாளியான இவரும், அதே ஊரைச் சேர்ந்த விஷால் என்கின்ற முனுசாமி (28) என்பவரும் நண்பர்கள். இதற்கிடையே தியாகராஜனுக்கும். முனுசாமிக்கும் இடைய பணம் கொடுக்கல் வாங்கல் இருந்ததாகவும், தியாகராஜன் தான் கடனாக கொடுத்த ரூ.200-ஐ திரும்ப கேட்டதாகவும், இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த முனுசாமி, கத்தியால் தியாகராஜனை குத்தியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த தியாகராஜன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முனுசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story