பாலக்கோட்டில் பெண்ணை திட்டிய தொழிலாளி கைது
தர்மபுரி
பாலக்கோடு:
பாலக்கோடு கனம்பள்ளி தெருவை சேர்ந்தவர் பாலாஜி குமார். எல்.ஐ.சி. ஏஜெண்ட். இவருடைய மனைவி கவிமணி (வயது 46). இந்தநிலையில் கனம்பள்ளி தெருவில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. இதனால் பாலாஜிகுமார் வீட்டின் வாசற்படியை தொழிலாளர்கள் இடிக்க முயன்றனர். அப்போது கவிமணி, வாசற்படியை இடிக்காமல் பணி செய்யுமாறு தெரிவித்துள்ளார். ஆனால் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான கார்த்தி (34) வாசற்படியை இடித்தே ஆக வேண்டும் என்று கூறி, கவிமணியை அவதூறாக திட்டி உள்ளார். இதுகுறித்து பாலக்கோடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர்.
Next Story