விவசாயி கொலை வழக்கில் தாய்-மகன் கைது கோர்ட்டில் வாலிபர் சரண்

விவசாயி கொலை வழக்கில் தாய்-மகன் கைது கோர்ட்டில் வாலிபர் சரண்
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய்-மகன் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய வாலிபர் ஒருவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய்-மகன் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய வாலிபர் ஒருவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

விவசாயி படுகொலை

சிவகங்கை அடுத்த வீரவலசை கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி (வயது 35). விவசாயி. இவரது வீட்டின் அருகே மாரி என்பவரின் வீட்டில் உள்ள தென்னை மரத்தில் ஓலை வெட்டிய போது மட்டை விழுந்து முனியசாமியின் வீட்டுக்கு செல்லும் மின்சார வயர் துண்டிக்கப்பட்டதாம். இதனால் ஆத்திரமடைந்த முனியசாமி, மாரியின் மனைவி ஏலம்மாள் (65) என்பவரிடம் தகராறு செய்தாராம்.

இதில் ஆத்திரமடைந்த ஏலம்மாள் மற்றும் அவரது மகன் ஆகியோர் சேர்ந்து முனியசாமியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

தாய்-மகன் கைது

இதுதொடர்பாக சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்கு பதிவு செய்து ஏலம்மாள் (65) அவரது மகன் முத்து விஜய் (42) ஆகிய 2 பேரை கைது செய்தார். மேலும் முத்து விஜயய்யின் மகன் செல்வம் (20) என்பவர் சிவகாசி கோர்ட்டில் சரணடைந்தார்.

Related Tags :
Next Story