பிரசித்தி பெற்ற மடப்புரம் கோவிலில்பத்திரகாளியம்மன் சிலையில் தங்க மூக்குத்திகள் திருடிய 3 பேர் கைது


பிரசித்தி பெற்ற மடப்புரம் கோவிலில்பத்திரகாளியம்மன் சிலையில் தங்க மூக்குத்திகள் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சிலையில் இருந்த தங்க மூக்குத்திகள் திருடிய வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சிவகங்கை

திருப்புவனம்,

பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சிலையில் இருந்த தங்க மூக்குத்திகள் திருடிய வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தங்க மூக்குத்திகள் திருட்டு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் புகழ்பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 1-ந் தேதி இரவு பத்திரகாளி அம்மன் சிலையில் இருந்த கல் பதித்த தங்க மூக்குத்திகள் இரண்டு திருட்டு போனது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கோவில் பூசாரி குமார் திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

3 பேர் கைது

அதன் அடிப்படையில் மதுரை மாவட்டத்ைத சேர்ந்த 17 வயது சிறுவனை திருப்புவனம் அருகே போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுவனிடமிருந்து ஒரு மூக்குத்தியை பறிமுதல் செய்தனர்.

அந்த சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த திருட்டு வழக்கில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் மணலூர் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே 2 பேர் சந்தேகத்திற்கு இடமாக நிற்பதாக கிடைத்த தகவலின்படி அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார், அந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மடப்புரம் கோவில் நகை திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என தெரியவந்தது.

அதில் ஒருவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் எனவும், மற்றொருவர் ஓவலூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்ற விஜயகுமார் (32) எனவும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து மேலும் ஒரு மூக்குத்தியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story