புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் சிக்கினர்


புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 31 March 2023 12:30 AM IST (Updated: 31 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்படி கே.ஆர்.பி. அணை, போச்சம்பள்ளி, பர்கூர், நாகரசம்பட்டி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில் பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற பழைய பேயனூர் சின்னசாமி (வயது 44), புதுமோட்டூர் தங்கவேல் (63), சீமனூர் ராஜகோபால் (45), குட்டூர் சின்னசாமி (45), தேன்கனிக்கோட்டை சீனிவாசன் (56) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.427 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story