கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில்10 கிலோ குட்கா வைத்திருந்தவர் கைது


கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில்10 கிலோ குட்கா வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 7 April 2023 12:30 AM IST (Updated: 7 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி டவுன் போலீசார் புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் கையில் பையுடன் நின்ற நபரை சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் 10 கிலோ 320 கிராம் கொண்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களான ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்டவை இருந்தன. அதன் மதிப்பு ரூ.10 ஆயிரத்து 880 ஆகும்.

இதையடுத்து குட்கா கடத்தி கொண்டு வந்ததாக திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெரியகாளைமுத்தூரை சேர்ந்த இமாமுதின் (55) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணையில் புகையிலை பொருட்கள் பெங்களூருவில் இருந்து வாங்கி வரப்பட்டது தெரியவந்தது.


Related Tags :
Next Story