சூளகிரி அருகே அண்ணன், தம்பியை தாக்கியவர் கைது


சூளகிரி அருகே அண்ணன், தம்பியை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி தாலுகா காளிங்கவரம் அருகே உள்ள பொன்னல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 29). இவருடைய அண்ணன் செந்தில்குமார் (32). அதே ஊரை சேர்ந்தவர் திம்மராஜ் (26). விவசாயி.

சக்திவேலின் அத்தை மகள், ஒருவரை காதல் திருமணம் செய்து 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி திம்மராஜ், சக்திவேல், செந்தில்குமார் ஆகியோருடன் சேர்ந்து மது குடித்தார். அப்போது, சக்திவேலின் உறவுக்கார பெண் குறித்து திம்மராஜ் தவறாக பேசினார்.

இதில் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த திம்மராஜ், செந்தில்குமார் மற்றும் சக்திவேல் ஆகிய 2 பேரையும் பீர்பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயம் அடைந்த சக்திவேல், செந்தில்குமார் ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில்,திம்மராஜை சூளகிரி போலீசார் கைது செய்தனர்.


Next Story