சென்னிமலை அருகே 800 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது


சென்னிமலை அருகே 800 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
x

சென்னிமலை அருகே 800 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

ஈரோடு

ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் சென்னிமலை அருகே பெருந்துறைரோடு ஈங்கூர் ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது வேனில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த ஆட்டோவில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கீரனூர் ரெட்டிவலசை சேர்ந்த செல்வராஜ் (வயது 50), சேலம் மாவட்டம் இருப்பாளியை சேர்ந்த லட்சுமணன் (39) ஆகியோர் என்பதும், அவர்கள் பெருந்துறை சிப்காட் பகுதியில் தங்கி உள்ள வடமாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செல்வராஜ், லட்சுமணன் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 800 கிலோ ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.


Next Story