ஈரோட்டில் கட்டிட தொழிலாளியை கொன்ற வாலிபர் கைது- மேலும் 2 பேருக்கு வலைவீச்சு


ஈரோட்டில் கட்டிட தொழிலாளியை கொன்ற வாலிபர் கைது- மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
x

ஈரோட்டில் கட்டிட தொழிலாளியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு

ஈரோட்டில் கட்டிட தொழிலாளியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொலை

ஈரோடு சூரம்பட்டிவலசு பாரதிநகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. இவர் நேற்று முன்தினம் இரவு சூரம்பட்டிவலசில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது அருந்துவதற்காக சென்றார். அங்கு மது அருந்திவிட்டு அவர் வெளியே வந்து நின்றார். அப்போது மது குடித்துவிட்டு வெளியே வந்த 3 பேர் வழிவிடும்படி கோபாலகிருஷ்ணனிடம் கூறி உள்ளனர். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த 3 பேரும் கோபாலகிருஷ்ணனை தாக்கி உள்ளனர். இதில் அவர் கீழே சரிந்து விழுந்தார். அதன்பிறகு அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். டாஸ்மாக் கடையின் முன்பு கோபால கிருஷ்ணன் கீழே விழுந்து கிடந்ததால், மதுபோதையில் விழுந்து கிடந்ததாக அங்கிருந்தவர்கள் நினைத்தனர். 20 நிமிடங்களுக்கு மேலாகியும் அவர் எழுந்திருக்காமல் இருந்ததால், அங்கிருந்தவர்கள் அவரை எழுப்ப முயன்றனர். அப்போது கோபால கிருஷ்ணன் இறந்துகிடந்தது தெரியவந்தது.

கைது

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், சூரம்பட்டிவலசு நேருவீதியை சேர்ந்த ராஜாவின் மகன் கிருஷ்ணகுமார் (26), ஸ்ரீதர், ஜீவா ஆகியோர் கோபால கிருஷ்ணனை அடித்து கொன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தச்சு தொழிலாளியான கிருஷ்ணகுமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்ரீதர், ஜீவா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதில் ஸ்ரீதர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story