கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 14 பேர் கைது
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் கஞ்சா விற்றதாக காவேரிப்பட்டணம், சூளகிரி, பாகலூர், ஓசூர் பகுதிகளில் 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.3,600 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் குட்கா விற்றதாக கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், தளி, மத்தூர், சிங்காரப்பேட்டை பகுதிகளில் 6 பேரை கைது செய்த போலீசார், ரூ.1,000 மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்றதாக காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த கலையரசன் (28), மிட்டஅள்ளி நாகராஜ் (35), துரை (43) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், 35 சீட்டுகள் மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story