கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 15 பேர் கைது


கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 15 பேர் கைது
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் கஞ்சா வைத்திருந்ததாக ஊத்தங்கரை பாரதிபுரம் ஜீவித்குமார் (வயது 21), வரமலைகுண்டா வெங்கடேசன் (42), ஓசூர் தேர்பேட்டை நாகராஜ் (22), சூளகிரி தாலுகா அகரம் வெங்கடேஷ் (45), ஓசூர் சிப்காட் அரசு (24), சின்ன பேளகொண்டப்பள்ளி நாகராஜ் (52), மிடுதேப்பள்ளி கரிசித்தப்பா (45), கிருஷ்ணேபாளையம் தொட்டி தாமரை செல்வன் (20), போச்சம்பள்ளி சேகர் (29) ஆகிய 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5,800 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

குட்கா

அதேபோல தடை செய்யப்பட்ட குட்கா விற்ற ஊத்தங்கரை தாலுகா செங்கல்நீர்பட்டி சட்டமுத்து (50), சிங்காரப்பேட்டை சதாத் அலி (71), கூர்சம்பட்டி மாதப்பன் (52), கிருஷ்ணகிரி லைன்கொல்லை ராமசாமி (78), காவேரிப்பட்டணம் அருள்குமார் (47) ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.640 பறிமுதல் செய்யப்பட்டது.

அதே போல கனகமுட்லு பகுதியில் லாட்டரி விற்ற பெரிய மோட்டூரை சேர்ந்த முருகன் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.150 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story