கோஷ்டி மோதலில் மேலும் 2 பேர் கைது


கோஷ்டி மோதலில் மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

அஞ்செட்டி அருகே கோட்டையூர் கிராமத்தில் ஜீன்மநத்தம் மாரியம்மன் கோவில் விழா நடந்தது. விழாவில் மோகன் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது மரலிங்கா என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது கோஷ்டி மோதலானது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இந்த தாக்குதலில் 9 பேர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 7 பேரை ஏற்கனவே கைது செய்தனர். இதற்கிடையே நேற்று அனுமந்தபுரத்தை சேர்ந்த அய்யனார் (வயது26), கோட்டையூரை சேர்ந்த அருண்குமார் (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story