பார் ஊழியரை தாக்கிய 2 பேர் கைது


பார் ஊழியரை தாக்கிய 2 பேர் கைது
x

பள்ளிபாளையம் அருகே பார் ஊழியரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

வெப்படை அடுத்த ரங்கனூர் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை அருகே பார் உள்ளது. அந்த பாரில் வெற்றிவேல் (வயது 21) என்பவர் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பள்ளிபாளையத்தை சேர்ந்த கவுரி சங்கர் (27), வெப்படையை சேர்ந்த அசோக்குமார் (27) ஆகிய இருவரும் அந்த பாரில் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது வெற்றிவேலுவுக்கும், அவர்கள் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் வெற்றிவேலை அவர்கள் தாக்கி உள்ளனர். இதுகுறித்து வெற்றிவேல் வெப்படை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் கவுரிசங்கர், அசோக்குமார் ஆகிய 2 போ் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.


Next Story