கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது
x
தினத்தந்தி 14 Jun 2023 1:00 AM IST (Updated: 14 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

பாகலூர் அருகே உள்ள மூர்த்திகானப்பள்ளி தின்னாவை சேர்ந்தவர் அஸ்வத் (வயது 49) விவசாயி. இவர் அந்த பகுதியில் சப்பலம்மா சாமி கோவிலை நிர்வகித்து வருகிறார். கடந்த 7-ந் தேதி இந்த கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடி சென்றார். இதுகுறித்து அஸ்வத் பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது பேரிகை அருகே உள்ள அத்திமுகத்தை சேர்ந்த கணேஷ் (26) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் உண்டியல் காணிக்கை ரூ.10 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தனர்.


Next Story