கெலமங்கலம் அருகே கூலித்தொழிலாளியை தாக்கியவர் கைது
ராயக்கோட்டை
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கெலமங்கலம் அருகே உள்ள இருதாளம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 36), கூலித்தொழிலாளி. இவர் உதவியுடன் அதே பகுதியை சேர்ந்த ரத்தினகர் (38) என்பவர் ஓசூரில் உள்ள சண்முகம் என்பவரிடம் ஒரு ஆண்டுக்கு முன்பு ரூ.10 ஆயிரம் கடன் வாங்கினார். அதில் ரூ.6 ஆயிரத்தை திருப்பி கொடுத்து விட்டார். ஆனால் மீதமுள்ள 4 ஆயிரம் ரூபாயை ரத்தினகர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு பணத்தை தருமாறு சங்கர் கேட்டதால் ஆத்திரமடைந்த ரத்தினகர் தனது உறவினரான இருதாளத்தை சேர்ந்த லோகேஷ் உடன் சேர்ந்து சங்கரை தாக்கினார். இதை பார்த்த சங்கரின் மனைவி தட்டிக்கேட்டதால் அவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கெலமங்கலம் போலீசில் சங்கர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தினகரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள லோகேைஷ தேடி வருகின்றனர்.