ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த கோரியவர்கள் மீது தாக்குதல் 2 பேர் கைது


ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில்  கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த கோரியவர்கள் மீது தாக்குதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jun 2023 1:00 AM IST (Updated: 30 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிலையில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டும் என தமிழ் தேசிய பேரியக்கத்தின் சார்பில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கடந்த 27-ந்தேதி மனு அளித்ததாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்க சென்ற அதன் நிர்வாகிகள் மீது சிலர் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நிர்வாகி மாரிமுத்து உள்ளிட்டோர் ஓசூர் டவுன் போலீசில் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பா.ஜ.க. மற்றும் விஷ்வ இந்து பரிசத் அமைப்பை சேர்ந்த 5 பேர் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஓசூர் சிவகுமார் நகரை சேர்ந்த பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி மஞ்சுநாத் (42), பார்வதி நகரை சேர்ந்த வினோத் (32) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி கிரண், பா.ஜ.க நிர்வாகிகள் முருகன், ஆதி ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story