சிறுவனை தாக்கிய 2 பேர் கைது


சிறுவனை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 July 2023 1:00 AM IST (Updated: 3 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அலசநத்தம் பிஸ்மில்லா நகரை சேர்ந்தவர் சையத் பிரிஷ் (வயது 40). இவர் முனிதேவி நகரில் இறைச்சி கடை வைத்துள்ளார். கடந்த 30-ந் தேதி இரவு இவரது கடைக்கு 4 பேர் வந்து மீன் வாங்கி சாப்பிட்டனர். அப்போது அவர்கள் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.பின்னர் கடை உரிமையாளர் சையத்தின் 15 வயது மகனிடம் தகராறு செய்து அவரை தாக்கினார்கள். இது தொடர்பாக சையத் பிரிஷ் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவனை தாக்கியது ஓசூர் பஸ்தி ஆவலப்பள்ளி சாலையை சேர்ந்த சிவா (30), அகில் (28) என தெரியவந்தது. அவர்கள் 2 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.


Next Story