கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 15 பேர் கைது


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற  15 பேர் கைது
x
தினத்தந்தி 3 July 2023 1:00 AM IST (Updated: 3 July 2023 1:24 PM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டுக்கள் விற்றதாக 15 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சூதாடியதாக 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

கஞ்சா

சூளகிரி போலீசார் பஸ் நிலையம் அருகில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை சோதனை செய்த போது அவர் 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவரது பெயர் மாதப்பன் (வயது 48), மேலுமலை பக்கமுள்ள பிக்கனப்பள்ளியை சேர்ந்தவர் என்றும், தாபா ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

லாட்டரி சீட்டுக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுகிறதா என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் லாட்டரி சீட்டுக்கள் விற்ற அரசம்பட்டி கந்தன் (48), போச்சம்பள்ளி உதயகுமார் (38), கிருஷ்ணகிரி தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெரு காமராஜ் (43), சாப்பர்த்தி ஜானிபாஷா (55), காமன்தொட்டி அருகே ரவுத்தப்பள்ளி யுவராஜ் (34), தேன்கனிக்கோட்டை அப்துல் சலீம் (55), ராயக்கோட்டை வினோத் (25) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குட்கா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் குட்கா விற்ற ஊத்தங்கரை தாலுகா கல்லூர் முத்துக்கண்ணு (46), வேலம்பட்டி முருகேசன் (52), ஓசூர் பார்வதி நகர் தருமன் (38), பி.எஸ். திம்மசந்திரம் பில்லாரெட்டி (73), கலுகொண்டப்பள்ளி மாதன் (25), ஒட்டூர் ஆனந்த் (25), கெலமங்கலம் ஆசீப் (27) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 580 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

அதே போல மாவட்டத்தில் யாரும் பணம் வைத்து சூதாடுகிறார்களா என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் பணம் வைத்து சூதாடிய வேலம்பட்டி நவீன் (29), மாரிசெட்டிஅள்ளி பிரவீன் (24) உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,400 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story