திருமண விருந்தில் தகராறு செய்த வாலிபர் கைது
திருமண விருந்தில் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கரூர்
தோகைமலை அருகே உள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்த ராமர் (வயது 44). இவரது வீட்டில் கடந்த 5 நாட்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இதற்கான விருந்து நிகழ்ச்சி நேற்று முன்தினம் ராமர் வீட்டில் நடந்தது. அப்போது ராமர் வீட்டின் அருகே வசிக்கும் பொக்லைன் இயக்குபவர் ரூபதி (24) என்பவர் குடிபோதையில் விருந்து நடக்கும் இடத்திற்கு வந்து தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டு இருந்து உள்ளார். இதையறிந்த ராமர் அவரது தாயார் மாரியாயி, ராமரின் மகன் சுரேஷ் ஆகியோர் ரூபதியை சமாதானம் செய்ய முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த ரூபதி, 3 பேரையும் தகாதா வார்த்தையால் திட்டி தகராறில் ஈடுபட்டு அடித்து, கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து ரூபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story