விக்கிரவாண்டி அருகே பெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்ற தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது


விக்கிரவாண்டி அருகே    பெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்ற தொழிலாளி    போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே பெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்ற தொழிலா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம்


விக்கிரவாண்டி தாலுகாவிற்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 42 வயதுடையவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்தது. இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. மேலும் சில நாட்களாக அவர், குடிபோதையில் பெற்ற மகள் என்றுகூட பாராமல் 16 வயதுடைய சிறுமியிடம் அடிக்கடி தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். பெற்ற தந்தையே மகளிடம் இவ்வாறு தவறாக நடக்க முயற்சி செய்கிறாரே என்றும் இவர் செய்யும் அட்டூழியத்தை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் அந்த சிறுமி மிகவும் மனவேதனையுடன் இருந்து வந்தாள்.

இந்நிலையில் சம்பவத்தன்று போதை தலைக்கேறிய நிலையில் வீட்டிற்கு வந்த அவர், தனது மகளிடம் மீண்டும் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் தந்தை மீது வெறுப்படைந்த அந்த சிறுமி, நடந்த சம்பவத்தை பற்றி தனது தாயிடம் கூறி கதறி அழுதார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இதுபற்றி, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அந்த கூலித்தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகளிடமே குடிபோதையில் தந்தை தவறாக நடக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story