புரோட்டா மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது
புரோட்டா மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது
தஞ்சாவூர்
ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இது குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை மீட்டனர். சம்பந்தப்பட்ட சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஒரத்தநாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்த ஒரத்தநாட்டை அடுத்துள்ள வெள்ளூர் கிராமத்தைச்சேர்ந்த விஜயகுமார் (வயது36) என்பவர் அந்த சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து விஜயகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story