கிருஷ்ணகிரி மாவட்டத்தில்குட்கா, லாட்டரி விற்ற 11 பேர் கைது
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, லாட்டரி சீட்டு விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டடார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே கிருஷ்ணகிரி, ஓசூர், பேரிகை, சூளகிரி, ராயக்கோட்டை, கெலமங்கலம், தளி ஆகிய பகுதிகளில் போலீசார் மளிகை, பெட்டிக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 10 கடைகளில் குட்கா பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
லாட்டரி சீட்டு
இதேபோன்று ஓசூர் அட்கோ போலீசார் பூ மார்க்கெட் அருகில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற ஜவளகிரியை சேர்ந்த சோமசேகர் (46) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.