150 கிலோ காட்டெருமை இறைச்சி, துப்பாக்கியுடன் 2 பேர் கைது


150 கிலோ காட்டெருமை இறைச்சி,  துப்பாக்கியுடன் 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 July 2023 2:30 AM IST (Updated: 22 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

போடி அருகே 150 கிலோ காட்டெருமை இறைச்சி, துப்பாக்கியுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி

போடி அருகே போடிமெட்டு சாலையில், முந்தல் பகுதியில் தனியார் தென்னந்தோப்பு உள்ளது. இங்கு சந்தேகப்படும் வகையில் ஒரு கும்பல் சுற்றித்திரிவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்து ஒரு கும்பல், வனத்துறையினரை பார்த்ததும் தப்பிஓடியது. இதையடுத்து வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றனர்.

அப்போது 2 பேர் மட்டும் சிக்கினர். விசாரணையில் அவர்கள், அங்கு காவலாளியாக வேலை பார்க்கும் சன்னாசி, ஆறுமுகம் என்பது தெரியவந்தது. மேலும் அங்கு 150 கிலோ காட்டெருமை இறைச்சியும், நாட்டு துப்பாக்கி மற்றும் 6 தோட்டக்கள் இருந்தன. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், பிடிபட்ட 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பிஓடிய 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கும்பல், காட்டெருமையை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story