கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 8 பேர் கைதுசூதாடிய 12 பேர் சிக்கினர்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 8 பேர் கைதுசூதாடிய 12 பேர் சிக்கினர்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை செய்ததாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். அதே போல பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

குட்கா விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது மளிகை, பெட்டிக்கடைகளில் குட்கா விற்பனை செய்த சொக்காபுரம் முனிகிருஷ்ணப்பா (வயது52), அத்திகானூர் செல்வராஜ் (49) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

லாட்டரி- கஞ்சா

இதேபோல் லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஓசூர் பாகலூர் சாலை பிரவீன்குமார் (40), கெலமங்கலம் ஜீ.பி. முருகேஷ் (45), சிங்காரப்பேட்டை அருகே உள்ள கெண்டிகானூர் பிரபு (39) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த காவேரிப்பட்டணம் மிட்டஅள்ளி காதர்பாஷா (30), கார்த்திக் (32), ஓசூர் தக்காளி மார்க்கெட் பகுதியை சேர்ந்த விஜி (20) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சூதாட்டம்

அதே போல மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய கொத்தூர் சங்கர் (37), சீனிவாசன் (48), மாலூர் சிக்கதாசனஅள்ளி சந்தோஷ் (32), மல்லேஷ் (25) உள்பட மொத்தம் 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story