ஆண்டிப்பட்டி அருகே உடைகற்கள் திருடியவர் கைது
ஆண்டிப்பட்டி அருகே உடைகற்கள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
தேனி
ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையிலான போலீசார், அம்மச்சியாபுரம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடைகற்கள் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வந்தது. அந்த டிராக்டரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் அம்மச்சியாபுரம் தெற்குத்தெருவை சேர்ந்த கருத்தப்பாண்டி என்பதும், அம்மாச்சியாபுரம் பட்டாளம்மன் கோவில் அருகில் கிடந்த உடைகற்களை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கருத்தப்பாண்டியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story