ஓசூர் பகுதியில்மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது20 வாகனங்கள் பறிமுதல்


ஓசூர் பகுதியில்மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது20 வாகனங்கள் பறிமுதல்
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாகன சோதனை

ஓசூர் மாநகர பகுதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் தலைமையிலான தனிப்படை போலீசார், சிப்காட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். போலீசார் அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் துருவி, துருவி விசாரணை செய்தனர்.

2 பேர் கைது

அப்போது அவர்கள் தின்னூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ்குமார் (வயது 25), தேன்கனிக்கோட்டையை சேர்ந்த ஷேக்காதர் (33) என்பதும், இவர்கள் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. மேலும் ஹரிஷ்குமார் பிரபல மோட்டார் சைக்கிள் திருடன் என்பதும், இதற்கு ஷேக்காதர் சாவியை தயார் செய்து கொடுத்ததும் ெதாியவந்தது.

இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


Next Story