புகையிலை பொருட்கள் விற்ற அ.தி.மு.க. பிரமுகர் கைது
வத்தலக்குண்டுவில் புகையிலை பொருட்கள் விற்ற அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்
வத்தலக்குண்டு கன்னிமார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாசர் முகமதுதாவூதி (வயது 45). இவர், அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்றத்தின் வத்தலக்குண்டு நகர செயலாளராக உள்ளார். வத்தலக்குண்டு பஸ் நிலையம் அருகே இவருக்கு சொந்தமான பெட்டிக்கடை உள்ளது. இங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா மற்றும் போலீசார் அந்த பெட்டிக்கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடையில் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முகமது தாவூதியை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story