மாரண்டஅள்ளி அருகே சூதாடிய 4 பேர் கைது
மாரண்டஅள்ளி அருகே சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி அருகே வட்டகணம்பட்டியில் கூட்ரோடு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அங்குள்ள அருகே புளியந்தோப்பில் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் வட்டகணம்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 35), தன்ராஜ் (36), சுந்தரபாண்டியன் (39), காந்தி (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.9 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story