புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் உத்தனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் தலைமையில் போலீசார் அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது நெல்லூர் கிராமத்தில் புகையிலை பொருட்களை விற்றதாக கார்த்திக் (வயது 26), கவுரிபுரத்தை சேர்ந்த குருமூர்த்தி (48), பீர்ஜேபள்ளியை சேர்ந்த பிரபு (34) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று அஞ்செட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையில் போலீசார் தொட்டமஞ்சு கிராமத்தில் உள்ள மளிகை கடையில் சோதனை செய்தனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் ஸ்ரீகாந்தன் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story