ஓசூர் பஸ் நிலையத்தில் பையில் கஞ்சா வைத்திருந்த பெண் உள்பட 2 பேர் கைது
ஓசூர் பஸ் நிலையத்தில் பையில் கஞ்சா வைத்திருந்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி
ஓசூர்:
ஓசூர் பஸ் நிலைய பகுதியில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பஸ் நிலையத்தில் 2 பேர் கையில் பையுடன் நின்று கொண்டு இருந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம் செல்லயம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 60), நாமக்கல் மாவட்டம் மணியனூரை சேர்ந்த பொம்மையன் மனைவி புஷ்பா (44) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story