ஓசூர் பஸ் நிலையத்தில் புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது


ஓசூர் பஸ் நிலையத்தில்  புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
x

ஓசூர் பஸ் நிலையத்தில் புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் டவுன் போலீசார் நேற்று முன்தினம் பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் கையில் பையுடன் நின்ற நபரிடம் போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட 31 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் வேலூர் மாவட்டம் நெல்வாடியை சேர்ந்த வினோத்குமார் (29) என்பதும், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை பஸ்சில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.19 ஆயிரத்து 440 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story